தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ''வெக்கை'' நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தில் சர்ச்சையான காட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன் என திமுக தலைவர் ஸ்டாலின் அசுரன் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இப்படத்தை பார்த்துவிட்டு. தனது கருத்தை ட்விட்டரில், 'அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து, சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதைகளம் வசனம் என வென்று காட்டியிருக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் நடிகர் தனுஷுக்கும் பாராட்டுகள்' என்று கூறியுள்ளார். ஸ்டாலினின் இந்த ட்வீட் பதிவை ரசிகர்கள் பலரும் சமூகவலைதளத்தில் கொண்டாடியும் பகிர்ந்தும் வருகின்றனர்.