தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - undefined

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

By

Published : Sep 14, 2021, 12:57 PM IST

Updated : Sep 14, 2021, 3:07 PM IST

12:56 September 14

டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோர் திமுக மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: காலியாக உள்ள 7 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு இடங்கள், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், மகாராஷ்டிரா, புதுச்சேரி ஆகியவற்றில் தலா ஒரு இடம் என தற்போது மொத்தம் ஏழு மாநிலங்களைவை இடங்கள் காலியாக உள்ளன.  

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் அக்டோபர் 4ஆம் தேதியும்,  அக்டோபர் 6ஆம் தேதி புதுச்சேரியிலும் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

இந்நிலையில், திமுக சார்பில் இரண்டு மாநிலங்களவைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (செப். 14) அறிவித்துள்ளார். டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இத்தேர்தலுக்கு வரும் செப்டம்பர் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 23ஆம் தேதி வேட்புமனு பரிசீலனைக்கு, 27ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் ஆகும்.

காலியாக உள்ள 2 இடங்கள்

தமிழ்நாட்டில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தங்களது எம்.பி பதவிகளை கடந்த மே மாதம் 7ஆம் தேதி ராஜினாமா செய்தனர். கே.பி. முனுசாமி வேப்பனஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதியிலும், ஆர்.வைத்திலிங்கம் ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வென்று தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ளனர்.

இதில், கே.பி. முனுசாமியின் பதவிக்காலம் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதிவரை இருந்தது. ஆனால், ஆர். வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதிவரை தான் இருந்தது.

எனவே, இத்தேர்தலில் கே.பி. முனுசாமி இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் ஐந்தாண்டு கால பதவியையும், வைத்திலிங்கம் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் எட்டு மாத கால பதவியையும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 7 துறைகளில் மோசமான நிதி மேலாண்மையால் கோடிக்கணக்கில் வீண் செலவு- சிஏஜி

Last Updated : Sep 14, 2021, 3:07 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details