தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எழுவரின் விடுதலை கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு 2021 ஜனவரி 27 இல் அனுப்பப்பட்டது.. தமிழ்நாடு அரசு பதில்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் எழுவரின் விடுதலை தொடர்பான கோப்புகள் ஆளுநரிடமிருந்து கடந்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பதில்
தமிழ்நாடு அரசு பதில்

By

Published : Apr 22, 2022, 10:46 AM IST

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய கடந்த 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது.

அரசு அனுப்பிய தீர்மானத்தை ஆளுநர் தாமதிப்பதால், ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களை விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, முன் கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக பேரறிவாளன் மட்டுமல்லாமல் 7 பேரின் ஆவணங்களையும் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் எந்த தேதியில் ஆளுநரிடமிருந்து குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது என தமிழ்நாடு அரசு தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது.

நேற்று (ஏப்ரல் 21) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி கடந்த ஆண்டு ஜனவரி 27இல் ஆளுநர் அலுவலகத்திலிருந்து குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், நளினியின் மரண தண்டனை தமிழ்நாடு அரசாலும், பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனை உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாகவும் மாற்றப்பட்டது.

அரசால் தண்டனை குறைப்பு செய்யப்பட்ட தன்னை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்த பிறகு, அதற்கு ஒப்புதல் அளிக்காமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாளும் சட்டவிரோத காவலில் இருப்பதாகத் தான் கருத வேண்டும். மேலும் தடா சட்டப்பிரிவுகளின் கீழ் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டதால், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, தடா சட்டப்பிரிவுகளின் கீழ் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் நளினி உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாரா? என, விளக்கமளிக்க நளினி தரப்பு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை விவகாரம் - பாரபட்சம் காட்டவில்லை என தமிழக அரசு பதில்

ABOUT THE AUTHOR

...view details