தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீதிமன்றம் கண்டிப்பு; வழக்கை திரும்ப பெற்றார் ரஜினிகாந்த்! - ரஜனிகாந்த் சொத்து வரி பிரச்னை

“ஏன் அவசர அவசரமாக நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள்; இவ்வாறு நடந்து கொண்டால் நீதிமன்றம் அபராதம் விதிக்கும்” என நீதிபதி எச்சரிக்கை விடுத்ததால், வழக்கைத் திரும்பப் பெருவதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajinikanth withdrew the marriage hall case Rajinikanth moves HC against tax for marriage hall Rajinikanth tax demand நீதிமன்றம் கண்டிப்பு; வழக்கை திரும்ப பெற்றார் ரஜினிகாந்த் ரஜனிகாந்த் சொத்து வரி பிரச்னை ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்ட சொத்துவரி
Rajinikanth withdrew the marriage hall case Rajinikanth moves HC against tax for marriage hall Rajinikanth tax demand நீதிமன்றம் கண்டிப்பு; வழக்கை திரும்ப பெற்றார் ரஜினிகாந்த் ரஜனிகாந்த் சொத்து வரி பிரச்னை ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்ட சொத்துவரி

By

Published : Oct 14, 2020, 1:09 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சி அனுப்பிய சொத்து வரி நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவில், “சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் சொத்து வரி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் என்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாத நிலையில் அதன் மூலம் எந்த வருமானமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆகவே ஊரடங்கு காரணமாக தனக்கு சொத்துவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், அதுவரை அபராதமோ? வட்டியோ? விதிக்கக் கூடாது என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், நோட்டீஸ் அனுப்பப்பட்ட 10 நாள்களில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளீர்கள். ஏன் அவசர அவசரமாக நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதற்காக அபராதம் விதிப்பேன் என்றும் எச்சரித்தார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திரும்பப் பெறுவது தொடர்பான மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி இதுகுறித்து இன்று (அக்.14) நீதிமன்ற வழக்குகளின் முடிவில் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’ரஜினிகாந்த் வழியில் பயணிக்கிறோம்’: அர்ஜுன் சம்பத்

ABOUT THE AUTHOR

...view details