சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நேற்று (டிசம்பர் 12) தனது 72ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 13) ரஜினிகாந்த், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “என் பிறந்த நாளன்று என்னை அன்புடன் வாழ்த்திய மத்திய அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, பல மாநில ஆளுநர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், ஜி.கே. வாசன், திருநாவுக்கரசர், டி.கே. ரங்கராஜன், பொன். ராதாகிருஷ்ணன், வைகோ, அண்ணாமலை, அன்புமணி, திருமாவளவன், சீமான், தினகரன், சசிகலா, பல மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும்.
கமல் ஹாசன், இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து, அமிதாப்பச்சன், ஷாருக்கான், சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன்சிங், வெங்கடேஷ் ஐயர், பல பிரபலங்களுக்கும், திரை உலகைச் சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும், என் நலனுக்காகக் கோயில்களில் பூஜைகளும், ஹோமங்களும், அன்னதானங்களும் நடத்தி பிரார்த்தனை செய்த என்னை வாழவைக்கும் தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:2001 நாடாளுமன்றத் தாக்குதல்: தலைவர்கள் மரியாதை