கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ் என்ற மாற்றுத் திறனாளி இளைஞர், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்து கேரளப் பேரிடர் நிவாரண நிதி அளித்தார். அப்போது அவர் தனது கால்கள் கொண்டு பினராய் விஜயனோடு எடுத்துக்கொண்ட செல்ஃபி பெரும் வைரலானது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தைச் சந்திக்க வேண்டும் என பிரணவ், தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். இதனை அறிந்து கொண்ட ரஜினி அவரது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார்.