சென்னை:நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றும் படியும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் புரொஃபைல் பிக்சராக தேசியக் கொடி படத்தை வைக்கவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
நடிகர் ரஜினியின் வீட்டில் தேசியக் கொடியேற்றம் - modi
நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் வசிக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினி வீட்டின் முன் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது
வீட்டின் முன் தேசிய கொடி ஏற்றிய ரஜினி
அதன்படி நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தின் புரொஃபைல் பிக்சராக மூவர்ண கொடியை மாற்றினார், அதைத்தொடர்ந்து தற்போது அவரது வீட்டின் முன்பு தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:75 -ஆவது சுதந்திர தினவிழா: இளைஞரின் கண்ணில் தேசியக்கொடி