சென்னை செம்மொழிப் பூங்கா அருகே கடந்த 22ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த உமாபதி தலைமையில் நடிகர் ரஜினிகாந்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ரஜினி ரசிகர்கள், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மீது புகார் மனு ஒன்றை அளித்தனர்.
திராவிடர் விடுதலைக் கழகம் மீது ரஜினி ரசிகர்கள் புகார் - திராவிடர் விடுதலைக் கழகம்
சென்னை: திராவிடர் விடுதலைக் கழகத்தினர் 15 பேர் மீது நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
complaint
புகாரளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர் கோபி, நடிகர் ரஜினிகாந்திற்கு கொலை மிரட்டல் விடுக்கும்வகையில் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த 15 நபர்கள் மீது, தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடிகர் ரஜினிகாந்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:’ஒரு படமும் ஓடாது, நடவடிக்கைகள் முடக்கப்படும்’ - ரஜினியை எச்சரிக்கும் தி.வி.க.!