நடிகர் ரஜினிகாந்த் அக்டோபர் 28ஆம் தேதி மாலை லேசான மயக்க நிலையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வழக்கமான பரிசோதனைக்காக ரஜினி அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினிகாந்த்! - ரஜினிகாந்த்
22:03 October 31
ரத்தநாள மறுசுழற்சி அறுவை சிகிச்சை செய்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.
இந்நிலையில் ரத்த நாளத்தில் கொழுப்பு அடைப்பை நீக்குவதற்கான ரத்தநாள மறுசுழற்சி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வாயிலாக தெரிவித்தது. அந்த அறிக்கையில் அடுத்த சில நாள்கள் ஓய்வுக்குப் பின்னர் ரஜினி வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் 1ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று (அக்டோபர் 31) இரவே அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதையும் படிங்க:'அண்ணாத்த' ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!