தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மின்சார வாரிய தலைவராக ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் நியமனம் - tneb

ராஜேஷ் லக்கானி
ராஜேஷ் லக்கானி

By

Published : May 16, 2021, 12:41 PM IST

Updated : May 16, 2021, 2:27 PM IST

12:39 May 16

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவராகவும், அதன் நிர்வாக இயக்குநராகவும் ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு தொல்லியல், ஆவணக் காப்பகத்தின் ஆணையராக பதவி வகித்து வந்தவர்.

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக மூத்த ஐஏஎஸ் அலுவலர் ராஜேஷ் லக்கானியை நியமித்துத் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர்  வெ. இறையன்பு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இந்தப் பொறுப்பில் ஏற்கெனவே பணியாற்றி வந்த பங்கஜ் குமார் பன்சாலுக்குப் பதிலாக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றிய ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், பின்னர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறைக்கு 2020ஆம் ஆண்டு மாற்றப்பட்டார்.

Last Updated : May 16, 2021, 2:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details