சென்னை மேற்கு மாவட்ட திமுகசெயலாளராகவும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த ஜெ. அன்பழகன் கடந்த ஜூன் 10 ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டுஉயிரிழந்தார். இந்நிலையில், அவர் வகித்துவந்த சென்னை மேற்கு மாவட்டச் செயலாலர் பதவி காலியாக இருந்தது.
ஜெ. அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு புதிய பொறுப்பு! - Chennai western district
சென்னை: சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக மறைந்த ஜெ. அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Raja Anpalagan appointed Western District Youth Organizer in Chennai
இதனைத் தொடர்ந்து தற்போது அந்த இடத்திற்குப் பொறுப்பாளராக சென்னை மேற்கு மாவட்ட திமுகஇளைஞரணிஅமைப்பாளர் நே. சிற்றரசு நியமிக்கப்பட்டுள்ளார். சிற்றரசு வகித்துவந்த பதவிக்கு மறைந்த ஜெ. அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.