சென்னை புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று (நவ.3) இரவு முதல் இன்று (நவ.4) காலை வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பொழிச்சலூர் ஊராட்சி அலுவலகம் முன்பு தேங்கி நிற்கும் மழை நீர் - சென்னை மாவட்ட செய்திகள்
சென்னை: பொழிச்சலூர் ஊராட்சி அலுவலகம் முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
![பொழிச்சலூர் ஊராட்சி அலுவலகம் முன்பு தேங்கி நிற்கும் மழை நீர் Rain water](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9429666-320-9429666-1604489342048.jpg)
Rain water
அதேபோல், பொழிச்சலூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக பொழிச்சலூர் ஊராட்சி அலுவலகம் முன்பு மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றன. மேலும் ஊராட்சி அலுவலகம் அருகே கிராம நிர்வாக அலுவலகம், ரேஷன் கடை, மருத்துவமனை இருப்பதால் நோயாளிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். இதை ஊராட்சி நிர்வாகம் விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.