தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர்: சிகிச்சை அறைகள் மாற்றம்! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கடந்த இரண்டு நாள்கள் பெய்த கனமழையால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் புகுந்தது. இதனால், அங்கு சிகிச்சை அறைகள் மாற்றப்பட்டுள்ளன.

Crompet Govt Hospital campus
Crompet Govt Hospital campus

By

Published : Jan 7, 2021, 8:01 PM IST

சென்னை:சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால் புறநகர்ப் பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்திலும், அறைகளைச் சுற்றியும் மழைநீர் புகுந்தது. இதனால் மருந்து கிடங்குகள், பிரசவ தனி அறைகள் முதல்தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. பொதுமக்கள், புறநோயாளிகள், மருத்துவர்களைச் சந்திக்கும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.

மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவுகள் அனைத்தும் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் சூழ்ந்துள்ள மழைநீரை மாநகராட்சி அலுவலர்கள் மின் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:பள்ளிகள் திறப்புக்கு பெரும்பாலான பெற்றோர் விருப்பம் - பள்ளிக் கல்வித் துறை தகவல்

ABOUT THE AUTHOR

...view details