வளிமண்டலத்தில் உள்ள மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் (செப்டம்பர் 30) திங்கட்கிழமை வரை கனமழைபெய்ய வாய்ப்புகள் இருக்கின்றன.
மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மாலை, இரவு நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.