சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
கடலூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என்பதால் அவர்கள் வழக்கம் போல் கடலுக்குள் செல்லலாம்.
தமிழ்நாட்டில் அக்டோபர் ஒன்று முதல் இன்று வரை பதிவான மழை நிலவரப்படி, 40 செண்டி மீட்டருக்கு 43 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட ஆறு விழுக்காடு அதிகமாகும். சென்னையை பொறுத்தவரை 68 செண்டி மீட்டருக்கு 58 செண்டி மீட்டர் கிடைத்துள்ளது. இது இயல்பை விட 14 விழுக்காடு குறைவு. வேலூர் மாவட்டத்திலும் 25 விழுக்காடு குறைவான மழையே பெய்துள்ளது. பாண்டிச்சேரியிலும் 30 விழுக்காடு குறைவாகவே மழை பெய்திருக்கிறது.