உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசியத் தேவைகள், மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஊரடங்கினால், சாலையோரமாக வாழும் ஆதரவற்றோர் உணவு, உடையின்றி மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் இணைந்து எழும்பூர் பகுதியில் உள்ள சாலையோர மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கி வருகின்றனர்.
சாலையோரம் ஆதரவற்றவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய ரயில்வே போலீஸ் ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் இன்றி இவர்கள் தவிர்த்து வருவதால் இன்று ரயில்வே துணை கண்காணிப்பாளர் எட்வர்ட் தலைமையில், தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளர் தாமஸ் யேசுதாசன் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து உடுத்த உடை, பேஸ்ட், பிரஷ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எழும்பூரை சுற்றியுள்ள சாலையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்கினர்.
மேலும், இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் ஆய்வாளர் சசிரேகா சென்ட்ரல் சுற்றியுள்ள பகுதிகளில் சாலையேரத்தில் வாழும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பு: திருநெல்வேலியில் பேரிடர் மீட்புக் குழு