சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று(செப்.11) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேட் நம்பர் 6-ஆம் பகுதியில் ஒருவர் உடைமைகளை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுள்ளார்.
அதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரை சோதனை செய்தபோது, ரயில்களில் ஏசி பெட்டிகளின் கழிவறைகளில் பயன்படுத்தப்படும் பிளம்பிங் பொருட்கள் திருடி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அலி ஹோசன்(22)என்பது தெரியவந்தது. மேலும், ஏசி பெட்டி கழிவறையில் இருக்கும் பிளம்பிங் பொருட்களை திருடிக் கொண்டு பழுப்புகளில் தண்ணீர் வெளியே வராமல் இருக்க அவற்றில் கட்டையை வைத்து அடைத்து விட்டு அந்த பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இப்பொருட்களை ரூபாய் 10 ஆயிரத்திற்கு விற்று அதை போதைக்காக பயன்படுத்துவதும் விசாரணையில் தெரிய உள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க:TODAY HOROSCOPE: இந்த நாள் இனிய நாளே... செப்டம்பர் 12 இன்றைய ராசிபலன்