தொழிலாளர்களுக்குப் போனஸ் வழங்க வேண்டும், தனியார் மயத்தைத் தடுக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், போக்குவரத்துப்படி, இரவுப்பணி படி, கூடுதல் பணி படி உள்ளிட்டவற்றை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னக ரயில்வே மஸ்தூர் சங்கத்தினர், சென்னை கோட்டம் முழுவதும் மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்னக ரயில்வே தலைமை அலுவலகத்தில் மழைக்கு இடையேயும், தொழிற்சங்கத்தினர் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீதர், போராடி பெற்ற உரிமைகள் பறிபோவதை ஏற்க முடியாது என்றும் தனியார் மயத்தால் ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் எனவும் தெரிவித்தார். கரோனாவைக்காரணம்காட்டி ரயில்வேயை தனியாருக்குத் தாரை வார்க்க நினைக்கும் மத்திய அரசு, அதன் மூலம் பொதுமக்களின் சலுகைகளைப் பறிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.