தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கொரோனா: ஈரானில் இருக்கும் தமிழர்களை மீட்கக்கோரி மனு! - மீன்பிடித் தொழில்

சென்னை: ஈரானில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் தமிழ்நாட்டு மீனவர்களைத் தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

mla
mla

By

Published : Mar 9, 2020, 2:31 PM IST

Updated : Mar 9, 2020, 3:13 PM IST

ராதாபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை முதலமைச்சரை இன்று நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், ஈரானில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் தமிழ்நாட்டு மீனவர்களைத் தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இன்பதுரை, "ராதாபுரம் தொகுதி உவரி கிராமத்தைச் சேர்ந்த திவான், சகாய ராஜேஷ் பினு ஆகியோர் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு ஈரானில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருவதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் ஈரான், அருகிலுள்ள சிறு, சிறு தீவுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருவதாகவும் கூறினர். எனவே, உடனடியாகத் தங்களைத் தாயகம் திரும்ப வழிவகை செய்யுமாறும் கோரினர்.

அதனடிப்படையில் இந்தக் கோரிக்கையை முதலமைச்சரிடம் மனுவாகக் கொடுத்துள்ளேன். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் “ எனக் கூறினார்.

கொரோனா: ஈரானில் இருக்கும் தமிழர்களை மீட்கக்கோரி மனு!

இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை

Last Updated : Mar 9, 2020, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details