சென்னை:சிறந்த கல்வி தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வைத்து வழங்கி கெளரவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், 2020-21 ஆம் கல்வியாண்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 389 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் அடையாளமாக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி முதலமைச்சர் கௌரவித்தார்.