திருவள்ளூர்மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரிக்கம்பேடு கிராமத்தில் செயல்பட்டு வரும் சென்னை அண்ணாநகர் ஐயப்பா சாரிட்டபில் ட்ரஸ்ட் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட புதிய மருத்துவ கருவிகளை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 15 மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து மாணவர்கள் வந்ததன் வாயிலாக கரோனா ஒரே நேரத்தில் அதிகமாக மாறியது. அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளபட்டன. அதில், முன்பை விட மிகக் குறைவாக பாதிப்பு தற்போது பதிவாகியுள்ளது. சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயரும் நிலை உள்ளது. முகக் கவசம் சமூக இடைவெளி, கை கழுவுதல் ஆகியவற்றை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். மாவட்ட நுழைவு வாயிலில் முறையாகப் பரிசோதனை மேற்கொள்வதில்லை. அதனை முறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய Xe பாதிப்பு இல்லை :பொதுமக்கள் அச்சப்பட வசியமில்லை; இதுவரை புதிய Xe பாதிப்பு இல்லை. மக்கள் கவனக் குறைவாக இருக்கக் கூடாது. . 95% நபர்கள் முகக் கவசம் அணிந்து வருகின்றனர். பரிசோதனை செய்வதை அதிகப்படுத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி :தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும். நேற்று கிட்டதட்ட 1.43 லட்சம் பேர் போட்டுள்ளனர். கடந்த வாரம் 4 ஆயிரம் பேர் மட்டுமே போட்டுள்ளனர். அரசு சார்பில் 3,000 முகாம்கள் மட்டுமே நடைபெற்றன. அதில், முகாம் ஒன்றுக்கு ஒருவர் என தடுப்பூசி செலுத்தியுள்ளார். கிட்டதட்ட 1.4 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. 40 லட்சம் பேர் முதல் தவணை செலுத்தவில்லை. 7-லிருந்து 8 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவில்லை. இவர்கள் செலுத்திக்கொள்ள வேண்டும். 18-60 வயதுள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.