டெல்லி: பாராளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய திமுக எம்பி ஆர்.எஸ். பாரதி, பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்ன ஆனது” எனக் வினாயெழுப்பினார்.
இது குறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. மத்தியில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாதது ஏன்?
தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆனால் ஆளுநர் நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு திருப்பி அனுப்பவில்லை” எனக் கூறினார். முன்னதாக அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், இன்று மாலை நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : DMK boycotted in lok sabha: நீட் மசோதா விவகாரம்; மக்களவையில் திமுக அமளி!