தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’ரெப்கோ’ வங்கி வங்கியே அல்ல! - உயர் நீதிமன்றம்! - ரெப்கோ வங்கி

சென்னை: ரிசர்வ் வங்கியின் உரிமை பெறாததால் ரெப்கோ வங்கியை வங்கியாகவே கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

repco
repco

By

Published : Mar 8, 2021, 7:04 PM IST

மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக தொடங்கப்பட்ட ரெப்கோ வங்கியில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பர்மா அகதி கணேசன் என்பவர் கடன் பெற்றிருந்தார். கடனை முறையாக செலுத்தாததை அடுத்து, கணேசனுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த ரெப்கோ வங்கி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீசை எதிர்த்து கணேசன் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கிக்காக அங்கீகாரம் பெற ரிசர்வ் வங்கியிடம் ரெப்கோ வங்கி கொடுத்த மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், உரிமம் பெற்ற வங்கிகளை போல ரெப்கோ வங்கி செயல்படுவது சட்ட விரோதம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், ரிசர்வ் வங்கியின் உரிமை பெறாததால் ரெப்கோ வங்கியை வங்கியாகவே கருத முடியாது என தெரிவித்து மனுதாரருக்கு ரெப்கோ வங்கி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:சட்டப்பேரவையில் ஆணுக்கு நிகர் பெண்? - மத்திய அரசு முடிவெடுக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details