தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கேஎன் நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து - minister kn nehru

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Etv Bharatஅமைச்சர் கேஎன் நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்
Etv Bharatஅமைச்சர் கேஎன் நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Sep 10, 2022, 1:18 PM IST

சென்னை:அமைச்சர் கே.என்.நேரு, 2020ஆம் ஆண்டு கோவையில் பேசிய போது, இன்னும் 11 மாதங்களில் அமைச்சர் வேலுமணி கோவை சிறையில் அடைக்கப்படுவார் என்று கருத்து தெரிவித்தார். இதனடிப்படையில் அவருக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நேருவின் பேச்சு அமைச்சரின் பணி குறித்து அவதூறு பரப்பும் வகையில் இல்லை என்றும், வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும்படியும் இல்லை என்றும் கூறி, அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details