தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு ரத்து...! - மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து விமர்சித்ததாக வழக்கு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து விமர்சித்ததாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ponmudi
ponmudi

By

Published : Apr 29, 2022, 10:32 PM IST

சென்னை:கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக-வின் அப்போதைய எம்.எல்.ஏ. க.பொன்முடி, அப்போதை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாகவும், இந்திய இறையாண்மைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக, அதிமுக நகரச் செயலாளராக இருந்த தட்சிணாமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரின் பேரில், திருவாரூர் நகர காவல் நிலையத்தில் க. பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டு பொன்முடி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தமிழ்நாடு அரசு அவதூறு வழக்குகளை திரும்ப பெற்றதை ஏற்றுக் கொண்டு, திருவாரூர் நகர காவல் நிலையத்தில் அமைச்சர் பொன்முடி மீது பதிவான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மோடிக்கு முதலமைச்சர் கடிதம் - இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அனுப்ப கோரிக்கை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details