தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இலங்கை நாட்டை சேர்ந்த குடும்பத்தினரிடம் விசாரணை! - chennai crime

சென்னையில் தங்கியிருந்த இலங்கை நாட்டை சேர்ந்த குடும்பத்தினரிடம் சந்தேகத்தின் பேரில் கியூ பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Q branch police are investigating the Sri Lankan family
Q branch police are investigating the Sri Lankan family

By

Published : Sep 10, 2020, 9:00 PM IST

சென்னை அண்ணா நகர் மேற்கு அன்பு காலனி பகுதியில் இலங்கை குடியுரிமை பெற்ற குடும்பத்தினர் சிலர் தங்கி வருவதாக கிடைத்த தகவலையடுத்து கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் அவர்கள், இலங்கை நாட்டை சேர்ந்த தாஜீதீன்(55) மற்றும் அவரது மனைவி ஆஷா(60) என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த 1989 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா வந்துள்ளதாகவும், பின்னர் திருநெல்வேலியில் சிறிது காலம் வாழ்ந்துவிட்டு சென்னையில் 1996 ஆம் ஆண்டு முதல் பல்வேறு இடங்களில் வாடகை வீட்டில் தங்கி வருவது தெரியவந்துள்ளது.
தாஜீதின் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் மார்கெட்டிங் பணி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இவரது மகன் பெங்களூருவில் வசித்து வருவதும் தெரியவந்தது.
பின்னர் இவர்களது அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தையும் கியூ பிரிவு போலீசார் பெற்று உரிய ஆவணங்களின்றி வசித்து வருகிறார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details