தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இல்லம் தேடி கல்வி திட்டம் - கிருஷ்ணசாமி எதிர்ப்பு

குலக் கல்வி திட்டத்தை விட இல்லம் தேடி கல்வி திட்டம் மோசமானது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி
செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி

By

Published : Oct 28, 2021, 7:55 PM IST

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னையிலுள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வங்காளதேசத்தில் இந்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அதனை கண்டித்து போராட்டம் நடத்தினோம். உலக இந்துகள் ஒருங்கிணைப்பு அமைப்பு என ஒரு அமைப்பை தொடங்கவுள்ளோம். அதற்காக மாநாடு நடைபெறும்.

தமிழ்நாட்டில் 5.30 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள உள்ள நிலையில், 4 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு மட்டுமே கணக்கு உள்ளது. மீதம் எங்கு உள்ளது என தெரியவில்லை. கோயில் நிலங்கள் தொடர்பாகவும், கோயில் நகை பற்றியும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இல்லம் தேடி கல்வி திட்டம்

கோயிலுக்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சொந்தமானது. எனவே கோயில் நிலங்களை மீட்டு கல்லூரிகள் பள்ளிகள் கட்டாமல், ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும். குல கல்வி திட்டத்தை விட இல்லம் தேடி கல்வி திட்டம் மோசமானது.

செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி

ஒத்த வயதுடைய குழந்தைகள் அனைவரும் அமர்ந்து கல்வி கற்கும் சூழல் சரியானது, வீட்டில் என்ன கற்க முடியும். இந்த திட்டம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனை உடனடியாக கைவிட வேண்டும்” என வலியுறுத்தினார்.

அனைத்திற்கும் குழு - அரசு எதற்கு?

தொடர்ந்து பேசிய அவர், “சமூக நீதிக் குழு போன்ற எண்ணற்ற குழுக்கள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துக்கும் குழு அமைத்தால் அரசு எதற்கு?. தனது ஆதரவாளர்களுக்குப் பதவி வழங்க வேண்டும் என்பதற்காக இது போன்ற குழுக்களை அமைத்து மக்கள் வரி பணத்தை வீணடிக்கின்றனர். பணத்தால் மட்டுமே இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றது” என்றார்.

இந்து கோயில்களுக்குள்ளே கிருஷ்ணசாமியால் பூஜை நடத்த முடியுமா? என அவரிடம் கேட்டதற்கு “தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளை தான் சேர்ப்பார்கள். பார்வையாளரை சேர்க்க மாட்டார்கள்” என கூறினார். அப்போ நீங்கள் பார்வையாளரா? எனக் கேட்டதற்கு அவர் எந்த பதிலும் கொடுக்கவில்லை.

இதையும் படிங்க:அதிமுகவில் சசிகலாவை சேர்க்க மாட்டோம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details