சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று மாலை சதீஷ் என்பவர் தான் காதலித்து வந்த சத்யா என்ற பெண்ணை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் இந்தச்சம்பவம் குறித்து தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் இச்சம்பவத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், 'சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்குக் காரணமான சதீஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம்; கொலையாளி சதீஷ் பிடிபட்டது எப்படி?