சென்னை: தமிழ்நாடு அரசு கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்ததோடு, விமீறலில் ஈடுபடும் கடைகள் மீது கடும் நடவடிக்கையை எடுத்துவருகிறது.
கடைக்கு சீல் வைத்த அலுவலர்கள்
இந்நிலையில், சென்னை பாண்டி பஜாரில் அமைந்துள்ள பிரபல காலணி நிறுவனமான பூமா (PUMA) கடைக்கு வந்த சென்னை மாநகராட்சி அலுவலர்கள், கடையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாததைக் கண்டறிந்தனர்.
மேலும், கடந்த ஏழு ஆண்டுகளாக, மாநகராட்சியின் தொழில் உரிமம் பெறாமல் கடையை நடத்தி வந்ததையும் மாநகராட்சி அலுவலர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து, கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்களை வெளியேற்றிய அவர்கள், கடைக்கு சீல் வைத்தனர்.
இதையடுத்து, கடை நிர்வாகத்தின் சார்பில் தொழில் உரிமம் பெறுவதற்கான உத்தரவாதம் அளித்ததின் பேரில் விரைவில் கடை திறக்க அனுமதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
இதையும் படிங்க:பாலியல் தொழில் நடத்தி வந்த தனியார் மண்டபத்திற்கு சீல்