தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாந்திரீகம் செய்வதாக கூறி 6 சவரன் நகை திருட்டு

புளியந்தோப்பில் மாந்திரீகம் செய்வதாக கூறி 6 சவரன் நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மாந்திரீகம் செய்வதாக கூறி 6 சவரன் நகை திருட்டு
மாந்திரீகம் செய்வதாக கூறி 6 சவரன் நகை திருட்டு

By

Published : Jul 3, 2021, 6:51 AM IST

Updated : Jul 3, 2021, 7:06 AM IST

சென்னை : புளியந்தோப்பு நேரு நகர் 4 வது தெருவை சேர்ந்தவர் அன்வர்பாஷா. இவருடைய மனைவி தெளலத்(46). இவர்களுக்கு ஆசிபா என்ற மகள் உள்ளார். தௌலத் வீட்டிலேயே டெய்லரிங் வேலை செய்து வருகிறார்.

அன்வர்பாஷா வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், தௌலத் வீட்டில் இருந்த போது அங்கு மந்தரவாதி என கூறிக்கொண்டு வந்த ஒருவர், உங்கள் மகளுக்கு நேரம் சரியில்லை என்று கூறியுள்ளார். பிறகு தாய், மகள் இருவர் மீதும் ரசாயனம் கலந்த தண்ணீரை தெளித்துள்ளார். இதனையடுத்து இருவரும் மயங்கி விழுந்தனர்.

மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்தபோது, ஆசிபா அணிந்திருந்த 6 சவரன் நகை திருடுபோனது தெரியவந்தது. இதுதொடர்பாக புளியந்தோப்பு காவல்நிலையத்தில் அன்வர்பாஷா அளித்த புகாரைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க : வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 107 சிலந்திகள் பறிமுதல்!

Last Updated : Jul 3, 2021, 7:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details