சென்னை: உக்ரைன் நாட்டிலிருந்து ஹங்கேரி வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த புதுச்சேரி மாணவி ரோஜா சிவமணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "மத்திய அரசின் கடுமையான முயற்சியால் உக்ரைன் நாட்டிலிருந்து நம் நாட்டு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதற்காக 26 விமானங்களுக்கும் மேல் இயக்கப்பட்டுவருகிறது. நான்கு மத்திய அமைச்சர்கள் நேரடியாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.