தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 26, 2021, 7:15 AM IST

ETV Bharat / city

தீபாவளிக்கு அரிசி, சர்க்கரை இலவசம் - புதுச்சேரி அரசு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை ஆகியவை இலவசமாக வழங்கப்படும் எனப் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

புதுச்சேரி: நாடு முழுவதும் வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏற்கனவே புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தீபாவளிக்காக அனைத்து குடும்பம் அட்டைதாரர்களுக்குமான அறிவிப்பு ஒன்றை புதுச்சேரி அரசு நேற்று வெளியிட்டது.

புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

அதில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தீபாவளிக்கு சென்னையில் இருந்து 16,000 பேருந்துகள்!

ABOUT THE AUTHOR

...view details