தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்’ - புதுச்சேரி காங்கிரஸ் கட்சி - புதுச்சேரி அண்மைச் செய்திகள்

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்.

போராட்டம் நடத்திய புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர்.
போராட்டம் நடத்திய புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர்.

By

Published : Jun 11, 2021, 1:55 PM IST

காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று (ஜூன்.11) நாடு தழுவிய போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டம் கரோனா விதிகளை பின்பற்றி எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்து.

அதன்படி இன்று (ஜூன்.11) புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கம்பன் கலையரங்கம் எதிரே உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டம் நடத்திய புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர்.

இதில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், மாநில செயலாளர் சூசைராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்று, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி முழக்கமிட்டனர்.

இதையும் படிங்க : கோவின் தளம் ஹேக் செய்யப்பட்டதா - அமைச்சகத்தின் பதில் என்ன?

ABOUT THE AUTHOR

...view details