புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவந்த பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேல், அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து இன்று தனது தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை என்றுகூறி, முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நீதி கேட்டு பேரணியாக அவர் சென்றார். சுதேசி மில் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக தலைமை தபால் நிலையம் சென்றடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி அரசின் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை - இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ கோரிக்கை! - சிபிஐ விசாரணை
புதுச்சேரி: பல்வேறு துறை ஊழல் குறித்து சிபிஐ விசாரணை கோர உள்ளதாக ஆளுங்கட்சிக்கு எதிராக நடத்திய பேரணியின்போது சட்டமன்ற உறுப்பினர் தனவேல் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ எனது தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர் காக்கும் மருந்து, மாத்திரைகள் இல்லை என்பதால் போராட்டம் நடத்தினேன். அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனை தட்டிக்கேட்டதால் கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளனர். ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுக்க உள்ளேன். புதுச்சேரியில் பல்வேறு துறை ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் கோர உள்ளேன் “ என்றார்.
இதையும் படிங்க: 'ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்த வலியுறுத்துவேன்' - புதுச்சேரி பாஜக தலைவர்