தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாரிடம் விடக்கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்!

புதுச்சேரி: அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாரிடம் விடக்கூடாது என்று கரும்பு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Sugar Factory Meeting
Sugar Factory Meeting

By

Published : Jul 14, 2020, 7:45 PM IST

புதுச்சேரி, லிங்காரெட்டிபாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது 100-க்கும் குறைவான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே மாநில அரசு தனியாருக்கு ஆலையை தாரை வார்க்கும் முடிவை கைவிடுமாறும் கூட்டுறவு ஆலையின் அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டன.

இந்நிலையில், கூட்டுறவு சர்க்கரை ஆலையை தொடர்ந்து அரசு நடத்துவதா அல்லது தனியாரிடம் விடுவதா என்பது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் புதுச்சேரி கூட்டுறவு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.பி. ஆர் செல்வம், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாளர் இயக்குநர் யஷ்வந்த்தய்யா ஆகியோர் கூட்டத்திற்கு தலைமை வகித்தனர்.

இதில், ஆலைத் தொழிலாளர்கள், கரும்பு விவசாயிகள், விவசாய, தொழிற்சாலை சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் சார்பில் பேசிய பிரதிநிதிகள், "விவசாயிகளுக்கு ஆலை சார்பில் 13 கோடி ரூபாய் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தொடர்ந்து புதுச்சேரி அரச இதனை ஏற்று நடத்த வேண்டும். தனியாரிடம் ஆலையை விடக்கூடாது" என வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:சாத்தான்குளம் வழக்கு: சிகிச்சை பெற்றுவந்த காவலர்கள் சிறையில் அடைப்பு!

ABOUT THE AUTHOR

...view details