புதுச்சேரியில் நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்குகின்றது. இந்நிலையில், துணை ஆளுநர் உரை குறித்த தகவல் துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து உரையை படித்து பார்க்க நேரம் ஒதுக்குமாறு தலைமை செயலர் மூலம் அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
நாளை காலை கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் துணை நிலை ஆளுநர் நேரம் கேட்டிருப்பது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், துணை நிலை ஆளுநர் உரையின்றி அவையை நடத்துவது தொடர்பாக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அரசு தரப்பில் துணை நிலை உரை இருந்தாலும், இல்லை என்றாலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் தவித்த தம்பதி: உதவிய காவல் கண்காணிப்பாளர்!