கரோனா காலத்தில் பொதுமக்கள் நேரடியாக வந்து புகாரளிக்க முடியாத சூழ்நிலையில், சென்னை காவல் ஆணையரிடம் வீடியோ கால் மூலம் புகாரளிக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று சென்னையில் உள்ள 12 காவல் துணை ஆணையர்களுக்கும் வீடியோ கால் மூலம் புகாரளிக்கவும், செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது தளர்வுகளை அதிகரித்து, 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்றார்போல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்க வரும் பொதுமக்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் புகாரளிக்க வரும் பொதுமக்களை காவலர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறைகள் இன்றி தவிக்கும் மக்கள் - காவல் ஆணையர் அலுவலகம்
சென்னை: காவல் ஆணையர் அலுவலகத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படாததால் புகாரளிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
வீடியோ கால் மூலம் காவல் ஆணையரிடம் புகாரளிக்கலாம் எனத் தெரிவித்திருந்தாலும், தொழில்நுட்பம் அறியாத ஏழை எளிய மக்களிடம், அதற்கான வழிமுறைகள் தெளிவாக தெரிவிக்கப்படாததால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் மட்டும் காவல் ஆணையரை எளிதில் சந்திக்க முடியும் போது, தங்களால் சந்திக்க வழிமுறைகள் கொடுக்கப்படவில்லை எனவும் புகார்தாரர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கரோனா: விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு