தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'குற்ற வழக்குகளுக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை' - வருந்திய உயர் நீதிமன்ற நீதிபதி! - come forward as a witness of criminal cases

குற்ற வழக்குகள் மற்றும் புலன் விசாரணைக்குப் பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனைத்தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 9, 2022, 2:59 PM IST

சென்னை: கடந்த 2006ஆம் ஆண்டின் இறுதியில், திரைப்படத்துறையில் துணை நடிகையாக இருந்த 16 வயது மைனர் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

பின் இவர்களுக்கு எதிராகப்பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், நான்கு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த 2013ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இத்தண்டனையை எதிர்த்து நால்வரும் மேல்முறையீடும் செய்தனர். அவ்வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது குற்றவாளிகளின் தரப்பில், தங்களுக்கு எதிராக சாட்சியமளித்த ஜெபராஜ் என்பவர் காவல்துறை தரப்பின் இருப்பு சாட்சி என்றும், அவரது சாட்சியத்தை கருத்தில் கொள்ளக்கூடாது என்றும் வாதிடப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களின் சாட்சியத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, ’குற்ற வழக்குகள் புலன் விசாரணையில் பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை என்பதை மறந்து விடமுடியாது. பொதுநலனின் மீது அக்கறை கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக’ முன் வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவல்துறையிடம் கைது மற்றும் பறிமுதல் தொடர்பாக சாட்சியம் அளித்த ஜெபராஜ் சாட்சியத்தை ஒதுக்கி விட முடியாது.
இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் நான்குபேருக்கும் எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து இருந்தாலும் கூட, தலைமறைவு குற்றவாளியான சரவணன் தான் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் மனுதாரர்கள் தங்கள் இச்சைக்காக சரவணனிடம் இரையாகிவிட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை மூன்று ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிங்க:பெயர் பலகை விழுந்து விபத்து: உயிரிழந்த இளைஞரின் போராட்ட வாழ்க்கை

ABOUT THE AUTHOR

...view details