சென்னை:கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வரும் பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வினை (CUET) தமிழ்நாட்டில் நடத்தக்கூடாது எனவும்; அவ்வாறு இத்தேர்வினை நடத்தினால் மாநில கல்வி உரிமைகள் பாதிக்கப்படும் எனவும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய அமைச்சர் தர்மேந்தர பிரதான் எழுதிய கடிதத்தில்: "கல்வியானது பொதுப்பட்டியலில் இருப்பதால் நாட்டின் கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க உதவுகிறது. "CUET” ஆனது மாணவர்கள் பயிற்சி எடுப்பதற்கான தேவையை நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் கோச்சிங் கலாசாரத்திற்கு எதிராக புதிய கல்வி கொள்கை(2020) உள்ளது.