இந்தியா முழுமையாக நெகிழிப் பொருட்களின் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்த, மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களும் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
நெகிழிக்கு மாற்றாகக் களமிறங்கிய அரசுப் பள்ளி மாணவிகள்! - நெகிழிக்கு தடை
சென்னை: உத்கல் அறக்கட்டளையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து சென்னை அசோக் பில்லரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு ஆயிரக்கணக்கான துணிப் பைகளை வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.
சென்னை மாநகராட்சி சார்பாக நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி, அவற்றைப் பயன்படுத்தியதற்காகக் கடந்த நான்கு மாதத்தில் மட்டும், 2 லட்சத்து 66 ஆயிரம் கிலோ நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 62 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெகிழிப் பைகளுக்கு மாற்றாக, துணிகளால் உருவாக்கப்பட்ட பைகளை, இந்தியா முழுவதும் பல கோடி கணக்கிலும், தமிழ்நாட்டில் இதுவரை 20 லட்சம் பைகளையும் பொதுமக்கள் மத்தியில் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது “உத்கல் அறக்கட்டளை”. இவர்களுடன் சென்னை மாநகராட்சியும் இணைந்து சென்னை அசோக் பில்லரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் மாணவியருக்கு ஆயிரக்கணக்கான துணிப் பைகளை வழங்கி, விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.