சென்னை: கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு ஊரடங்கு விதிகளை கடுமையாக்கி இருக்கிறது. தேவையில்லாமல் வெளியில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நடைபாதை காய்கறி, பழம் பூ கடைகள் திறந்திருக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயம்பேடு காய், கனி, மலர் சந்தைக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என அங்காடி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.