தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை சாலையில் தேங்கிய மழை நீர் - வாகன ஓட்டிகள் அவதி - Heavy rain in Chennai

சென்னையில் நேற்று பெய்த கனமழையால் சிட்லப்பாக்கம் பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் வரை ஏரிபோல் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதியடைந்துவருகின்றனர்.

சாலையில் தேங்கிய மழை நீர்
சாலையில் தேங்கிய மழை நீர்

By

Published : Sep 22, 2021, 2:57 PM IST

சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. மேலும், சென்னை, தாம்பரம், முடிச்சூர் பிரதான சாலையில் மெட்ரோ குடிநீருக்காகவும், பாதாள சாக்கடைப் பணிக்காகவும் பள்ளம் தோண்டப்பட்டு சரியான முறையில் மூடப்படாததால் சாலை முழுவதும் சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது.

மேலும், அந்தப் பள்ளத்தில் நேற்று இரவு (செப்.21) பெய்த கனமழையால் நீர் தேங்கியுள்ளது. இதனால், காலையில் இருந்தே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டுவருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

மழைநீரில் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள்

சுமார் 5 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி நேற்று இரவு பெய்த மழையால் சிட்லப்பாக்கம் பேரூராட்சி எதிரேவுள்ள சாலையில் ஒரு கி.மீ. வரை ஏரிபோல் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியாமல் செய்வதறியாது திகைத்துப்போய் உள்ளனர்.

சாலையில் தேங்கிய மழை நீர்

ஆங்காங்கே தோண்டிவைக்கப்பட்டுள்ள பள்ளங்களை மூடி, மழை நீரை வெளியேற்ற சென்னை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details