சென்னை: இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஆடி அமாவாசை(ஆகஸ்ட். 8), ஆடிப்பூரம் (ஆகஸ்ட். 11) மற்றும் 23ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை - மக்கள் கூட்டத்தைத் தவிர்க்கக் அறிவுறுத்தல்
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஆடி அமாவாசையான இன்று(ஆகஸ்ட். 8) பொதுயிடங்களில் மக்கள் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்று சென்னை காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று ஆடி அமாவாசை தினம் என்பதால், கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் தர்ப்பணம் கொடுப்பதற்காக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முதல் திருவான்மியூர், எலியட், மெரினா, அண்ணா சதுக்கம், திருவொற்றியூர், எண்ணூர் வரையிலான கடற்கரையில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆடி 18ஆம் பெருக்கில் வெறிச்சோடிய ஒகேனக்கல்