தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் - தேர்வுத்துறை - பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எச்சரிக்கை

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை(மே.05) தொடங்க உள்ள நிலையில், பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்
பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்

By

Published : May 4, 2022, 1:03 PM IST

சென்னை: 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை(மே.05) தொடங்க உள்ள நிலையில், மாணவர்கள் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு தெரியும் வகையில் பள்ளியில் போஸ்டாராக வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

  • தேர்வர்கள் தேர்வின்போது அச்சடித்த புத்தகங்கள் கையேடுகள் அல்லது கையெழுத்துப் பிரதி ஏதேனும் தன் வசம் வைத்திருந்து தாமாகவே அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தால், அவரை முதன்மைக் கண்காணிப்பாளரால் எச்சரிக்கை செய்யப்படுவார். தேர்வர் இத்தவறினை அதே பருவத்தில் மீண்டும் செய்தால் அவரிடமிருந்து எழுத்துப் பூர்வ விளக்கம் பெற்று வெளியேற்றப்படுவார். அடுத்து வரும் தேர்வுகளை எழுத தடையில்லை.
  • தேர்வர்கள் அச்சிடப்பட்ட புத்தகங்கள், கையேடுகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் துண்டுச் சீட்டுகள் ஏதேனும் தன்வசம் வைத்திருப்பதை அறைக்கண்காணிப்பாளரால் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை தேர்வர்கள் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தால், அந்த தேர்வரிடமிருந்து எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெற்று மையத்தை விட்டு முதன்மைக் கண்காணிப்பாளரால் வெளியேற்றப்படுவார். அடுத்து வரும் தேர்வுகளை எழுத தடையில்லை.
  • தேர்வர் ஆட்சேபனைக்குரிய பொருட்களை தன்வசம் வைத்திருந்து அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அன்றைய தேர்வு இரத்து செய்யப்படும். தேர்வர் ஆட்சேபனைக்குரிய பொருட்களை தன் வசம் வைத்திருந்து பயன்படுத்தி இருந்தால் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் மேலும், அடுத்த ஓராண்டு அதாவது இரு பருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும்.
  • தேர்வர் மற்றத் தேர்வரின் விடைத்தாளை பார்த்துதேர்வெழுதியிருந்தாலோ அல்லது பிறரின் உதவியினை தேர்வறைக்கு உள்ளேயோ அல்லது வெளியில் இருந்து பெற்றது கண்டறியப்பட்டால், அந்த தேர்வரிடமிருந்து எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெற்று மையத்தை விட்டு முதன்மைக்
    கண்காணிப்பாளரால் வெளியேற்றப்படுவார்.அடுத்து வரும் பாடத் தேர்வுகளை எழுத
    தடையில்லை. தேர்வு இரத்து செய்யப்படுவதுடன், சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் ஓர் ஆண்டு அல்லது அடுத்த இருபருவத் தேர்வுகளுக்கும் அதிகமான பருவங்கள் தேர்வெழுத தடை
    விதிக்கப்படும்.
  • ஒரு தேர்வர் துண்டுத்தாளை தன்வசம் வைத்திருந்து பார்த்து எழுதியிருந்தாலோ / எழுத முயற்சி
    செய்தது கண்டறியப்பட்டால், அந்த தேர்வர் அப்பருவத்தில் எழுதிய அனைத்து பாடத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதுடன் குற்றத்தின் தன்மை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த இரு பருவங்களுக்கும் தேர்வெழுத தடை விதிக்கப்படும்.
  • தேர்வர்கள் அல்லது அவரைச் சார்ந்த நபர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன்
    தொடர்பு கொண்டு உதவி பெற நிர்பந்தித்து இருந்தால் அவர், அப்பருவத் தேர்வு தடை செய்யப்பட்டு சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட காலம் வரை தேர்வெழுத தடை விதிக்கப்படும்.
  • ஆள்மாறாட்டம் செய்தல், அப்பருவத் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்.
  • விடைத்தாளை பரிமாற்றம் செய்தால், தேர்வுகள் இரத்து செய்யப்படுவதுடன், சூழ்நிலை
    மற்றும் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட பருவங்கள் தேர்வெழுதத் தடை விதிக்கப்படும்.
  • தேர்வர்கள் விடைத்தாளில் தவறான அல்லது புண்படுத்தும் வார்த்தைகளை எழுதினாலோ அல்லது தேர்ச்சி மதிப்பெண்களை வழங்குமாறு விடைத்தாள் மதிப்பீட்டாளருக்கோ அல்லது அரசுத் தேர்வுகள்
    இயக்குநருக்கோ கடிதம் எழுதி இருந்தால், அந்த குறிப்பிட்ட பாடத் தேர்வு ரத்து செய்யப்படும்.
  • தேர்வறை கண்காணிப்பாளரிடம் தேர்வறையில் அல்லது தேர்வறைக்கு வெளியில் தவறாக நடந்து கொண்டால். (தகாத வார்த்தைகளால் திட்டுதல் / தாக்குதல்) அந்த மாணவர், முதன்மைக் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி தேர்வறையிலிருந்து வெளியேற்றப்படுவதுடன் பிற பாடத் தேர்வுகளும் எழுத தடை விதிக்கப்படுவார் அல்லது தேர்வுகள் ரத்து செய்யப்படுவதுடன் குறிப்பிட்ட பருவங்கள் தேர்வு எழுத தடை / நிரந்தர தடை விதிக்கப்படும்.
  • விடைத்தாளை தேர்வு அறைக்கு வெளியே எடுத்து செல்வது அல்லது அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றுவிட்டு உடனடியாக திரும்ப வந்து ஒப்படைத்தல்/ ஒப்படைக்காவிட்டாலும், தேர்வறையில் விடைத்தாளை கிழித்தல்.
    தேர்வர் முதன்மைக் கண்காணிப்பாளரால் எச்சரிக்கை செய்யப்பட்டு, அப்பாடத் தேர்வு
    ரத்து செய்யப்படும்.
  • வினாத்தாளை வெளியில் அனுப்பினால், தேர்வு இரத்து செய்யப்பட்டு மூன்றாண்டுகள்
    அதாவது அடுத்தடுத்த ஆறு பருவத் தேர்வுகள் இரத்து செய்யப்படும்.
  • அறைக் கண்காணிப்பாளர் அல்லது முதன்மைக் கண்காணிப்பாளரிடம் விளக்கம் அளிக்க மறுத்தால், அப்பாடத் தேர்வு இரத்து செய்யப்படுவதுடன் அடுத்துவரும் பாடத் தேர்வுகளும் எழுத தடை
    விதிக்கப்படும்.
  • மதிப்பீட்டு பணி / சிறப்பு கூர்ந்தாய்வின் போது அகச்சான்றுகளின் அடிப்படையில் பார்த்து எழுதியது கண்டுபிடிக்கப்பட்டால் , அந்தத் பாடத் தேர்வு இரத்து செய்யப்படுவதுடன் அடுத்துவரும் இருபருவத் தேர்வுகள் எழுத
    தடை விதிக்கப்படும்.
  • விடைத்தாள் மற்றும் கூடுதல் விடைத்தாள்களில் உள்ளே / வெளியே அடையாளப்படுத்தும்படி சிறப்பு குறியீடுகள் (பெயர் / தலைப்பெழுத்து/ பிற அடையாள குறியீடுகள்)
    எழுதப்பட்டு இருந்தால், தேர்வரின் விளக்கத்தினை பெற்ற பின் சூழ்நிலையைப் பொருத்து எச்சரிக்கை அல்லது அப்பாடத் தேர்வு ரத்து செய்யப்படும்.
  • வினாத்தாளில் விடை எழுதி அதை பிறத் தேர்வருக்கு வழங்கும் வகையில்
    தூக்கி எறிந்தால் அந்தப் பாடத் தேர்வு ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details