இது குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2018-19ஆம் கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்புக்கும், 2019-2020ஆம் கல்வியாண்டு முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய பாடத் திட்டத்தின்படி இனி பொதுத்தேர்வு
சென்னை: 10,11,12ஆம் வகுப்புக்ளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி இனி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மார்ச் 2020 பருவம் முதல் நடத்தப்படும் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்படி மட்டுமே நடத்தப்படும். மார்ச் 2020 பருவம் முதல் பழைய பாடத்திட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது.
ஏற்கனவே பழைய பாடத்திட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள்,
தேர்ச்சி பெறாத, வருகை புரியாத பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் மார்ச் 2020 பருவம் முதல் நடைபெறும் தேர்வுகளில் எழுதிக் கொள்ளலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.