தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்விலிருந்து அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் விலக்கு

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்விலிருந்து விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

public exam cancelled for differently abled CM Stalin order
public exam cancelled for differently abled CM Stalin order

By

Published : Jul 31, 2021, 2:52 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதுவதிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும் விலக்களித்ததைப் போல வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுகளைத் தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவருக்கும்ம் 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப் பிரிவு 17(i)இன் அடிப்படையில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதனால் 313 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும்.

மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும்பட்சத்தில் இத்தேர்வினை எழுதலாம் என்றும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சிப் பெற்றதாக தங்களை அறிவிக்குமாறு கோரலாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கருணாநிதி உருவப்படம் திறப்பு விழா: குடியரசு தலைவருக்கு அழைப்பிதழ் வழங்கிய சபாநாயகர்

ABOUT THE AUTHOR

...view details