தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பப்ஜி மதன் கைது - வங்கிக்கணக்கு முடக்கம் - pubji madan arrest '

தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது
தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது

By

Published : Jun 18, 2021, 10:49 AM IST

Updated : Jun 18, 2021, 12:49 PM IST

10:40 June 18

யூடியூபில் ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை ஒளிபரப்பி வந்த பப்ஜி மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தருமபுரி : பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை தனது யூடியூப்பில் வெளியிட்டு வந்தவர் மதன். இதனால் பப்ஜி மதனை கைது செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு 2 புகார்கள் வந்தது. மேலும் தமிழகம் முழுவதும் 160க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலமாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் குவிந்தன. 
 

அதன் அடிப்படையில் பப்ஜி மதன் மீது ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து மதனை போலீசார் தேடி வந்தனர். வி.பி.என் சர்வரை பயன்படுத்தி தொடர்ந்து மதன் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில், பெருங்களத்தூர்,சேலம் போன்ற பகுதிகளில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்த போது, மதனின் மனைவி கிருத்திகாவை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். மதனின் யூடியூப் சேனலுக்கு அட்மினாக கிருத்திகா இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் மாதம் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து 3 சொகுசு கார்கள்,2 பங்களாக்கள் வாங்கியதும் தெரியவந்தது. 

மதனின் நெருக்கமானவர்களின் விவரங்களும்,செல்போன் எண்களும் பெறப்பட்டது.இதனையடுத்து உடந்தையாக இருந்ததாக கிருத்திகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த மதன் தருமபுரியில் நண்பரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் பப்ஜி மதனை இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன்,லேப்டாப் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கைது செய்த மதனை சென்னைக்கு கொண்டு வரும் பணியில் போலீசார் ஈடுபட்டுட்டுள்ளனர்.  சென்னைக்கு அழைத்து வந்து மதனிடம் வீடியோ குறித்தும், பணம் பறிப்பில் ஈடுபட்டது குறித்தும் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பப்ஜி மதனுக்கு உடந்தையாக இருந்த தோழிகள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். 

இதனிடையே பப்ஜி மதன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், எனவே முன்ஜாமீன் மனுவை விசாரிக்க தேவையில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து மதனின்  முன்ஜாமீன் மனுவை நீதிபதி தண்டபானி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

மேலும் மதனின் வங்கிக்கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். அந்த வங்கிக்கணக்கில் ரூ. 4 கோடி இருப்பு உள்ளது தெரியவந்துள்ளது. 

Last Updated : Jun 18, 2021, 12:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details