இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
"விவசாயப் பணிகளைச் செய்ய தடையில்லை' என்று அறிவிக்கப்பட்டுள்ள போதும், விவசாய மின் மோட்டார்களுக்கான மும்முனை (3phase) மின்சாரம் சரிவர வழங்கப்படவில்லை எனத் தகவல்கள் வருகின்றன. இதனால் காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் சாகுபடி பணியை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.