தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'வெளியுலக தொடர்பை ஏற்படுத்த நோயாளிகளுக்கு டிவி வழங்குக' - விஜயதாரணி கோரிக்கை - தனிமைப்படுத்தும் நோயாளிகளுக்கு வெளியுலக தொடர்பை ஏற்படுத்த தொலைக்காட்சி பெட்டி வைக்க வேண்டும்

சென்னை: தனிமைப்படுத்தும் நோயாளிகளுக்கு வெளியுலக தொடர்பை ஏற்படுத்த தொலைக்காட்சி பெட்டி வைக்க வேண்டும் என்று, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி வலியுறுத்தியுள்ளார்.

vijayadharani_ byte
vijayadharani_ byte

By

Published : Mar 23, 2020, 12:30 PM IST

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,

"கரோனா வைரஸ் தொற்றுக்கு முதலமைச்சரையும் தெரியாது, பிரதமரையும் தெரியாது. மாநிலத்திலும் 200க்கும் மேற்பட்டவர்கள் எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்க கூடாது என்ற தடை இருக்கிறது. அப்படி இருக்கும்பட்சத்தில், 234 பேர் உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மானியமாக ஆயிரம் ரூபாய் வீதம் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும். அதே வேளையில், ரேஷன் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் வாரம்தோறும் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கு தேவையான வசதிகள் மட்டுமின்றி வெளியுலக தொடர்பை ஏற்படுத்த தொலைக்காட்சி பெட்டியும் வைக்க வேண்டும்.

எனவே, கரோனா நோய் தொற்றின் தீவிரம் அடங்கும்வரை மக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறினார்.

இதையும் படிங்க: கரோனாவால் முடங்கியது நாட்டின் தலைநகர்!

ABOUT THE AUTHOR

...view details