தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய படிப்புக்கால விடுப்பு வழங்குக! - தமிழக மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு

சென்னை: தனியார் செவிலியர் கல்லூரிகளில் மேற்படிப்பு படிக்கும் அரசு செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய படிப்புக்கால விடுப்பு வழங்க அரசுக்கு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

study leave
study leave

By

Published : Dec 26, 2020, 6:14 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர். சாந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,” தனியார் செவிலியர் கல்லூரிகளில், அரசின் முறையான அனுமதியுடன் மேற்படிப்பு படிக்கும் அரசு செவிலியர்களுக்கும், ஏற்கனவே மேற்படிப்பை படித்து முடித்த அரசு செவிலியர்களுக்கும், அப்படிப்புக் காலத்தை அரசு பணிக்காலமாக கருதவேண்டும். அக்காலத்தை மேற்படிப்புக்கான விடுப்பாக கருதி, அப்படிப்புக் காலத்திற்கான ஊதியத்தையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

இத்தகைய உரிமை, அரசு செவிலியர் கல்லூரிகளில் படிக்கும் அரசு செவிலியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பை படிக்கும் அரசு மருத்துவர்களுக்கு இத்தகைய உரிமை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 250 க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் உடனடியாக பயனடைவர். எனவே, இது குறித்து அரசு உடனடி நடவடிக்கைக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details